Posts

Showing posts with the label அறிஞர் அண்ணா

திணிப்பு மொழியா ? இந்தி

Image
      திணிப்பு மொழியா ? இந்தி        ( ஏன் வேண்டாம் இந்தி ? ) இந்தி ; சமற்கிருதம் மற்றும் உருது மொழியின் கலப்பினால் உதித்த மொழியாக கருதப்படுகிறது.பாரசீக மன்னர்களின் படையெடுப்பின் போது அவர்தம் மொழி வடக்கே வழக்கிலிருந்த சமற்கிருதத்தோடு கலந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்தியா என்கிற மாநிலங்களின் கூட்டாட்சி நாடு உருவாவதற்கு முன்னே நாடு முழுமைக்கும் பரவியிருந்த மொழி பழந்திராவிட மொழி ( Proto Dravidian ). பின்னர் வடமேற்கு வழியாக நாட்டிற்குள் நுழைந்த ஆரியர்களின் வருகைக்குப்பின் அப்பழந்திராவிட மொழியோடு ஆரியர்களின் மொழியும் கலந்து பிராகிருதம் , பாலி முதலான மொழிகள் உருவானதாக வரலாற்று அறிஞர்களால் சொல்லப்படுகிறது.வடக்கே ஆரியர் , தெற்கே திராவிடர் என்ற நிலையாகி இருமொழிகளுக்கும் , இனங்களுக்கும் இடையேயான பிளவாகிப்போனது பிற்காலங்களில். சமற்கிருதம் ; (தேவ பாஷை) என்று வழங்கப் பெறுவதுண்டு . அப்படிக் கருதிய அம்மொழிக்காரர்கள் கடவுளிடம் உரையாடும் வேத சாஸ்திரங்கள் , மந்திரங்கள் என்று அம்மொழியை வளர்த்தனர்.  தமிழ் ; இலக்கண , இலக்கிய வளம் பெற்ற , சாதாரண மனிதர்கள் பேசும் மொழியாகவே கருதப்பட்டது. அது