Posts

Showing posts with the label சமூகமாற்றம்

பெண்ணியம் ! கண்ணியம் !

Image
பேதமே வேதமோ ? : பெண் , ஆண் என இருபாலினப் பிரிவென்பது மனிதயினம் மட்டுமல்லாது உலக உயிரினங்கள் எல்லாவற்றிலும் இயற்கையாகவே அமையப்பெற்ற பிரிவுகள் ஆகும். சமூக விலங்காக கருதப்படும் மனிதயினம் , மனித உயிர்களுக்குள்ளேயே சாதி பேதம் சொல்லும் விலங்கு , அப்படியிருக்க இயற்கையே இரு பிரிவாக வகுத்தப்பின் அதனை அவ்வளவு எளிதில் விட்டுவிடுமோ ?. ஆணினம் பெண்ணினத்தின் மீது செலுத்தும் அளவுமிஞ்சிய ஆதிக்கமே ' பெண்ணியம் ' என்கிற உரிமைக்கருத்தியல் உயிர்த்தெழ ஆரம்பமாக அமைந்தது. ஆணினம் உடல்வலிமை கொண்டு அடக்கியாண்ட போது , அவ்வடக்குமுறையை உணர்ந்த பெண்ணினம் உரிமைக்குரல் எழுப்பிப் போராட முன்வந்தது , பகுத்தறிவுச் சிந்தனை சமஉரிமைச் சிந்தனை கொண்டு அறிவார்ந்த ஆண்களும் உடன் வந்தனர் துணை நின்றனர். சங்க காலம் முதல் இன்று வரை உள்ள இலக்கியங்கள் பெண்ணினத்தின் மீதானப் பார்வையை இச்சமூகம் எவ்வாறு கடந்து வந்துள்ளது , நிகழ்ந்துள்ள மாற்றங்கள் , நிகழ வேண்டிய மாற்றங்கள் என அனைத்தையும் அறிய உதவுகிறது. தொல்காப்பியம் சொல்லும் பெண்மைக்கான இலக்கணம் : உயிரினும் சிறந்தன்று நானோ , நாணினும் செய்தீர் - காட்சிக்கற்