Posts

Showing posts with the label இலவசக்கல்வி சிறுகதை

இந்தக் கடைவீதியில்....

விடியற்காலையில் எழுந்து நடைபயிற்சிக்குச் சென்ற அப்பாவை ஏழு மணி ஆகியும் இன்னும் காணவில்லையென மகன் சுப்ரமணி தாயார் சத்யாவிடம் கேட்க , " உங்க அப்பா கூட இராமலிங்கமும் தான் பா போய்ருக்காரு , ரெண்டு பேரும் ஏதாவது பேசிக்கிட்டு இருப்பாங்க , உனக்கு தெரியாதா உங்க அப்பாவ பத்தி " பூங்காவிலே நடைபயிற்சிக்குப் பின் இருவரும் செய்தித்தாளைப் படித்து அன்றைய நிகழ்வுகளைப் பற்றி விவாதிப்பது வழக்கமான ஒன்று மனதில் பட்டதைப் பகிரும் அளவிற்கு உரித்தான நண்பர்கள் அவ்வளவு எளிதில் அமைந்துவிடுவதில்லை ; தேடினாலும் கிடைக்காத ஒன்று . இராமலிங்கமும் தட்சிணாமூர்த்தியும் பூங்காவில் கல்லால் ஆன மேசையில் அமர்ந்து புலரும் பொழுதின் புதிய காற்றைச் சுவாசித்தவாறே நீலவானின் திட்டுத்திட்டாக அமைந்த மேகங்களையும் அதன் சாயலையொத்தப்  பசும்புல்லின் மேல் படர்ந்த பனித்துளிகளையும் பார்த்து பார்த்து இளைப்பாறினர் இரசித்த வண்ணம் .என்ன லிங்கம் ? அமைதியா இருக்க இன்னைக்கு என்ன செய்தி ? என தட்சிணாமூர்த்தி கேட்டார். செய்திய விடுப்பா இன்னைக்கு வாரமலர் - ல பதிமூனு வயசு பையன் எழுதுன கவிதை ஒன்னு வந்திருக்கு பாரேன் " "அந்த கவிதை ஒ