______சொல்லக்கூடாது !
பள்ளிப்பருவ நாட்களை நினைவுக் கூர்கையில் வருகைப் பதிவேட்டில் உள்ள பெயர்கள் வருகைப் பதிவுக்கு மட்டும் தான் என்று அலட்சியமாக எண்ணிக் கொண்டுதான் இருந்தோம்.ஆனால் இந்தியாவில் பலருக்கு ஒரே மாதிரியான பெயர்கள் ஜோதிட அடிப்படையில் சமற்கிருத மொழியில் தான் சூட்டப்படுகிறது . ஜாதகம் , இராசி , நட்சத்திரம் தீர்மானிக்கிறது பெயர்களை ஆனால் வாழ்நிலை மட்டும் கீழ் மேலாக , கிரகப்பலன்களோ ? நமக்கு அதெல்லாம் வேண்டாம் . சாதாரண பெயர் , பயன்படுத்தும் இடம் பொறுத்து கிளப்பும் பிரச்சினை பற்றி நான் நேரில் கண்ட ஒரு நிகழ்வை மட்டும் சுருக்கமாக சொல்கிறேன் . கோகுல் என்பவர் எனது நண்பர் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை என்னோடே பயின்றவர் . அவன் பக்குவப்பட்ட நபராக தெரிந்தாலும் உண்மை அப்படியில்லை . அவன் வாயால் ஏற்பட்ட வாய்க்கால் தகராறோ ஒன்றா இரண்டா ? . அதே நேரம் பத்தாம் வகுப்பில் பாதியில் வந்து சேர்ந்தார் , நாகேந்திரன் என்று ஒரு மாணவன் , சில ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டதால் வேறு பள்ளியில் இருந்து நீக்கப்பட்ட மாணவன் இங்கு சேர்ந்தது எப்படி ? (வேறு எப்படி சிபாரிசு தான் ) வேடிக்கை என்னவென்றால் அதே பெ...