Posts

Showing posts with the label சிறுகதை

"கொட்டப்படாத குப்பைகள் "

Image
"குப்பைய போய் கொட்டிட்டு வா " "அப்புறம் குப்பை வண்டி திரும்ப வாரது "   " போட எழுந்து போ ..." தெருமுனையில் இருந்து விசில் சத்தம் கேட்டவுடன் அதனைத் தொடர்ந்து ஒலிக்கும் வசனங்கள் தான் இவை அம்மா  செல்வியிடமிருந்து . குப்பைகளை ஏழு மணிக்குள்ளாகச் சேகரிக்க டிரைசைக்கிளை இழுத்துக்கொண்டும் ,  தெருவைச் சுத்தம் செய்யும் பணியிலும் ஈடுபடும் துப்பரவுத் தொழிலாளியிடமிருந்து வரும் சமிக்கை தான் அந்த விசில் சத்தம்.குப்பைத்தொட்டியைக் கையில் எடுத்துக்கொண்டு முகங்கூடக் கழுவாமல் கண்கள் சொக்கியவாறே அரைகுறைப் பார்வையில் தெருமுக்கு வரை நடந்து சென்று குப்பையை வண்டியில் கொட்டிய பின் தூக்கம் தெளிந்து அந்தத் துப்புரவுத் தொழிலாளி முருகனின் முகத்தில் விழித்தே மணிகண்டனின் நாள் துவங்கிடும் குப்பைக் கொட்ட வரும் எல்லோருக்கும் அதே மாதிரியாகத் தான் என்றும் கூட சொல்லலாம். ஆனால் அவரை யாரும் பெரிதாகக் கண்டு கொள்வதில்லை , கேட்பாரற்ற யாரோ ஒருவரின் இடிந்த பழைய கட்டடம் ஒன்று உள்ளது அந்தப் பகுதியில் , அங்கு தான் அவர் வேலைகளை முடித்துவிட்டு இதரப் பொழுதுகளைக் கழிப்பார்  . தினசரி அவரவர்க்கு அமை

உதிரும் மாந்தர்கள்

Image
                                                      தினமும் இரவு பதினொரு மணிக்கு மேலும் கூட பச்சை நிற கட்டிடத்தின் முதல் மாடியில் உள்ள ஒற்றை வீட்டில் மின்விளக்குகளும் , தொலைக்காட்சியும் எப்போதும் இயங்கியவாறே இருக்கும் ‘ நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா ? ‘ என்ற பாடல் தொடங்கி  ‘ மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா ? ‘ பாடல் வரை நாளும் ஒலித்துக்கொண்டே இருக்கும் .உடல் மெலிந்த அறுபது வயது மூதாட்டி வெள்ளையம்மாள் பகலெல்லாம் மாடியின் முகப்பில் ( Balcony ) இரும்பு நாற்காலியில் அமர்ந்து வேடிக்கைப் பார்ப்பதும் , பிரகாச வானில் கூடிக் கலையும் மேகங்களின் உருவங்களைக் கண்டும் , பறவைகளையும் பார்த்தவாறே பொழுதைக் கழிப்பார்.இரவில் உறக்கம் பகையாகிப் போக பழைய பாட்டுக்களே துணையாகிப் போகும் போலும் அந்தத் தனிமையின் கைதிக்கு.இவ்வாறாகக் காலம் உருண்டோட வெள்ளையம்மாள் வசிக்கும் வீட்டிற்கு பக்கத்தில் உள்ள மாடி வீட்டிற்கு புதிதாக ஒரு குடும்பம் குடி வந்தது. தனசேகர் , மேகலா தம்பதியும் அவர்களது ஒரே மகன் வினோத்தும் தான் அந்தக் குடும்பம்.நாட்கள் செல்ல செல்ல தனசேகரும் , எப்போதும் தனிய