Posts

Showing posts with the label சமூகம்

லைஃப் அட் பாட்டோம் ஆஃப் தி டாப் Life at bottom of the (spinning) top.

Image
சரியான பராமரிப்பு இல்லாத இலவச கழிப்பிடத்தின் நாற்றம் வீசிக்கொண்டிருக்கும் இடத்திற்கு அருகில் போதாக் குறைக்குக் குப்பைத் தொட்டியும் சேர்ந்து கொண்டது " இந்தக் கோவிலுக்கு வந்தாலே இதான் பிரச்சனை, இவ்ளோ பேர் வர இடத்த இப்படி சுத்தம் இல்லாம வச்சிருக்காங்க"  என்று மூக்கை மூடிக் கொண்டு சிடுசிடுவென முணங்கிப் போனார்கள் பலர். அந்தக் கழிவறைக்கு வெளியே  நவரத்னநிற பாசிகளையும் , ஸ்படிக மாலைகளையும் விற்றுக் கொண்டிருக்கும் பெண்களிடம்  விலையை விசாரித்து பேரம் பேசிக் கொண்டே கழிப்பறைக்குள் செல்வதற்கு வரிசையில் காத்திருந்தார்கள். ருத்ராட்சம், கருங்காலி மாலை, அதை அணிந்து கொள்வதன்  மகிமைகளைச் சொல்லி விற்பனைக்கான பேரம் நடந்து கொண்டிருந்தது. மின் விளக்கு ஒன்று மினுக் மினுக்கென்று  எரிகையில் அந்தப் பாசிகள் தன்னை அசல் இரத்தினங்களாகப் பரிமாணித்துக் கொண்டிருப்பதை, கோவிலைச் சுற்றி முடித்து அங்கே சில தூரம் தள்ளி உட்கார்ந்து கொண்டு இதையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.எனக்கு அருகில் எத்தனையோ மக்கள் புரிந்த மொழியிலும் புரியாத மொழியிலும் பேசிக் கொண்டிருந்தனர் அவைகள் வேண்டு...

"கொட்டப்படாத குப்பைகள் "

Image
"குப்பைய போய் கொட்டிட்டு வா " "அப்புறம் குப்பை வண்டி திரும்ப வாரது "   " போட எழுந்து போ ..." தெருமுனையில் இருந்து விசில் சத்தம் கேட்டவுடன் அதனைத் தொடர்ந்து ஒலிக்கும் வசனங்கள் தான் இவை அம்மா  செல்வியிடமிருந்து . குப்பைகளை ஏழு மணிக்குள்ளாகச் சேகரிக்க டிரைசைக்கிளை இழுத்துக்கொண்டும் ,  தெருவைச் சுத்தம் செய்யும் பணியிலும் ஈடுபடும் துப்பரவுத் தொழிலாளியிடமிருந்து வரும் சமிக்ஞை தான் அந்த விசில் சத்தம்.குப்பைத்தொட்டியைக் கையில் எடுத்துக்கொண்டு முகங்கூடக் கழுவாமல் கண்கள் சொக்கியவாறே அரைகுறைப் பார்வையில் தெருமுக்கு வரை நடந்து சென்று குப்பையை வண்டியில் கொட்டிய பின் தூக்கம் தெளிந்து அந்தத் துப்புரவுத் தொழிலாளி முருகனின் முகத்தில் விழித்தே மணிகண்டனின் நாள் துவங்கிடும் குப்பைக் கொட்ட வரும் எல்லோருக்கும் அதே மாதிரியாகத் தான் என்றும் கூட சொல்லலாம். ஆனால் அவரை யாரும் பெரிதாகக் கண்டு கொள்வதில்லை , கேட்பாரற்ற யாரோ ஒருவரின் இடிந்த பழைய கட்டடம் ஒன்று உள்ளது அந்தப் பகுதியில் , அங்கு தான் அவர் வேலைகளை முடித்துவிட்டு இதரப் பொழுதுகளைக் கழிப்பார்  . தினசரி அவரவர்க்கு அமை...