Posts

Showing posts with the label தாழ்வுமனப்பான்மை

" ஸ்விட்ச் ஆஃப் "

Image
தூக்கத்தில் இருந்து எழுந்ததும்  திடீரென புகைமண்டலமாய்ப் பலவாறான விஷயங்களைப் பற்றிய நினைவுகள் சூழ்ந்திருக்க கண்களில் காரணமின்றி வழிந்த கண்ணீரோடு வெறுமையின் உச்சத்தில் படுக்கையிலேயே உட்கார்ந்திருந்த கரண் -க்கு இனம்புரியாத கவலை , எரிச்சல் , ஏன் இந்தப் பொழுது விடிகிறது? என்பது போலான கோபத்தில் படுக்கையறையை விட்டு வெளியேறினான்.முகம் கழுவிவிட்டு கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தான் தானே மெச்சிக் கொண்டான் , இப்போது எந்த விதமான சோகச் சமிக்ஞையும் தெரியவில்லை .கொஞ்ச நேரத்திற்கு முன் ஏன் அந்த மாதிரியான எண்ணங்கள் வந்தது என்று புரியாமல் நின்றான். குளித்துவிட்டு ஆடை அணிந்த பின் மீண்டும் வந்து கண்ணாடி முன் நின்று பார்க்கையில் சட்டை சுருக்கம் சுருக்கமாக இருப்பதைக் கண்டு தன் வீட்டில் வேலைப் பார்க்கும் வாசுவிடம் கோபித்துக்கொண்டு ஏசினான் . வாசு ஒரு வகையில் கரணின் அம்மா வழி உறவினர். நாற்பது வயது இருக்கும் . " ஏன் தம்பி இவ்வளவு கோவம் ? , எதுவும் பிரச்சனையா ? " " உங்க வேலைய ஒழுங்கா பாக்குறதில்ல , பிரச்சனையாம் ? போங்க ணா " அவரிடம் எப்போதும் மரியாதையாகப் பேசும் கரண் ஏன் இப்படிப