Posts

நாயைப் பார்த்தும் பொறாமையா !?

Image
எழுத்து எப்படி ஒருவரின் உணர்வோடு தொடர்புடையதோ அதே போலத்தான் புகைப்படங்களும் ஓவியங்களும் ஒரு உள்ளார்ந்த அர்த்தத்தை உணர்வோடு கொண்டிருக்கும் . அப்படி ஒரு புகைப்படத்தைப் பார்த்ததும் அதனுடனான அல்லது அது குறித்தான நினைவுகள் எல்லோருக்கும் வரத்தான்  செய்யும் . மனிதனுக்கு இருக்கிற சுயநலத் தேவைகளின் நினைப்பும் , நாய்க்குத் தனக்கு அன்பானவரிடம் பொழுதைக் கழிக்க வேண்டுமென்கிற நினைப்பும் இந்தப் புகைப்படத்தில் காட்டப்படுகிறது. அப்படியிந்தப் புகைப்படத்தைப் பார்த்ததும் ருஷ்ய எழுத்தாளர் அந்தோன் சேகவ் எழுதிய சிறுகதையில் ஒரு கதாப்பாத்திரம் பேசுகிற வசனம் தான் நினைவுக்கு வருகிறது . பனிக்கட்டிகள் உறைந்திருக்கும் அழகிய பொழுதில்  முதியவர் ஒருவர் தனக்கென இருக்கும் நிலத்தில் ஒரு பள்ளிக்கூடத்தைக் கட்ட வேண்டுமென்கிற ஆவலைத் தனது நண்பரிடம் தெரிவித்து அதில் என்னென்ன மாதிரியான அம்சங்கள் அதாவது ஆய்வகங்கள் , விவசாயம் பற்றிய ஆய்வகம் , இசை , நூலகம் என அனைத்து வசதிகளும் பொருந்திய ஒன்றாக அமைய வேண்டுமென்கிற விளக்கத்தைத் தருகையில் அவர் சொல்கிறார் , எல்லாவற்றையும் குறித்த தெளிவு ஒரு ஆசிரியருக்கு இருக்க வேண்டும் அப்

முழுமையற்ற இயற்கையின் முன் ...

Image
" பழுத்த இலைகள்  பூச்செடியின் அழகைக் கெடுப்பதாக  நினைக்கும் பொழுதுகளில் ஏனோ... முழுமையற்ற இயற்கையின் முன் இரசனை கெட்டவர்களாகி விடுகிறோம் "                                            - ச. குரு பிரசாந் இயற்கையின் அழகு அதன் முழுமையற்ற , பூரணமற்றத் தன்மையில் தான் இருக்கிறது என்பதை உணர்த்தும் இந்தக் கவிதையை நான் எழுதுகையில் சகிப்புத்தன்மையையும் , சகமனிதச் சிநேகத்தையும் இந்த இயற்கைச் சூழலும் , நாகரிகங்களும், பண்பாடுகளும் , மதங்களும் அடுத்தடுத்த தலைமுறை மனிதர்களுக்கு (நமக்கு) எந்தெந்த வகைகளில் கற்றுத்தர முயல்கின்றன என்பதைக் குறித்து யோசிக்கும் சமயத்தில் சில நாள்களுக்குப் பிறகு ஒரு ஜப்பானிய தத்துவம் குறித்தான சிறு அறிமுகம் கண்ணில் தட்டியது .  ஜப்பானில் உள்ள சின்னச் சின்ன தீவுகளில் உள்ள கிராம மக்கள் இந்த நவீன உலகிலும் உலகமயமாக்கலுக்குப் பிறகும் கூட தங்களுடைய மரபுகளை , பண்பாட்டை , கலாச்சாரத்தை , மேலும் தங்களுக்கே உரித்தான சடங்குகளைப் பின்பற்றி மதங்களின் ( ஜப்பானியர்கள் பின்பற்றும் மதங்கள் ஷின்டோ , கன்பூசியம், ஜென் ) பழமை மாறாமல் அதே சமயத்தில் முற்போக்கான சிந்தனையுடன் பின