" ஜஸ்ட் சிம்ப்லிஃபை தி திங்க்ஸ் "
எளிமையாகப் புலப்படுகிற விஷயங்களையும் நாம் ஒரு குறிப்பிட்ட பருவத்திற்குப் பிறகு எத்தனை சிக்கல்கள் உடைய ஒன்றாகப் பரிமாணிக்கத் தொடங்கி விடுகிறோம். உதாரணமாக நன்கு பரிச்சயமான ஒருவரிடம், நன்றாகப் பழகிக் கொண்டிருக்கிற ஒருவரிடம் இருந்து சில நாட்களுக்கு எந்த வித அழைப்பும், தொடர்புமற்றுப்போய் இருக்கும் சமயங்களில் நாம் என்னவெல்லாம் முடிச்சுப் போட்டு, எத்தனை சிக்கலான ஊகங்களையெல்லாம் எண்ண ஓட்டத்தில் கலந்து ஒரு அவசியமற்ற பரிதவிப்பை, உறவையே இழந்து விட்ட ஒரு பதற்றத்தை, தேவையற்றச் சிந்தனைகளால் நம்மை நிரப்பியிருக்கிறோம். குழந்தைப் பருவத்தில் அல்லது பள்ளியில் படிக்கும் நாட்களில் கூட நாம் இப்படி மிதமிஞ்சிய அர்த்தமில்லாத சிந்தனைகளில் நம்மைத் தொலைத்திருந்தோமா?. அர்த்தமற்றக் கவலைகளை நாமே உண்டாக்கி உள்ளுக்குள்ளேயே புழுங்கிக் கொண்டிருந்தோமா?. இல்லை, காலப்போக்கில் வந்து சேர்ந்தவை தான் இந்தக் கசடுகள் எல்லாமே. இதென்ன உளவியல் சார்ந்த சிந்தனை திடீரென்று, காரணம் ஒரு பள்ளி மாணவன் என்னிடம் கொடுத்த கணக்கிற்கு விடை காண முயன்ற போது இந்த மாதிரியான விஷயங்களை என்னிடத்தில் நானே அடையாளம் கண்டு கொண்டதால் தான். "உங்களுக்க...