துறவிலும் துரத்தும்

         துறவிலும் துரத்தும் 


வீரத்துறவி விவேகானந்தர் பற்றிய செவிவழிச் செய்திகள் பல தற்போதைய சமூகத்தில் பெரும்பாலும் உலவுவதைக் காண்கிறோம். அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தில் உரையாற்றுகையில் " சகோதர , சகோதரிகளே " எனக் கூறியதும் அங்கிருந்த மக்கள் ஆரவார ஒலியெழுப்பி நெகிழ்ந்ததாக வரலாறு சொல்லப்படுகிறது. அப்படி சிலரது வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகளைைக் கேட்க கேட்க மேலும் தெரிந்து கொள்ள ஆர்வம் ஏற்படுவது மனித இயல்பு. அப்படியான ஆர்வம் ஏற்படும் போது தேடிப் படிப்போம் , கேட்போம் . தெரிந்து கொண்டதைப் பிறரிடத்தில் சொல்வோம். அவ்வாறாக சுவாமி விவேகானந்தர் பற்றி அறிந்த நிகழ்வு ஒன்றையும் கூறுகிறேன்.
காசிக்குப் பயணம் மேற்கொண்டு விவேகானந்தர் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தார். வழியில் மரத்தின் நிழலில் அமர்ந்து கிராமத்துக்காரர் ஒருவர் ஹூக்காவைக் கொண்டு புகைப்பிடித்துக் கொண்டிருக்க சுவாமிக்கும் புகைக்க வேண்டும் என்ற எண்ணம் வரவே , அவரிடம் சென்று கேட்ட போது , " சாமி , நான் துப்புரவுத் தொழிலாளி , நீங்க நான் உபயோகப்படுத்துனத எப்டி சாமி ? " என்று சொன்னதும் விவேகானந்தரும் அவ்விடம் விட்டு நகர்ந்து சென்றார் . சிறிது தூரம் நடந்து சென்ற பிறகு ,
" நான் ஒரு துறவி , சாதி மத வேறுபாடு பார்த்து நான் நடந்து கொள்வது முறையாகாது , நான் இவ்வாறு ஏன் செய்தேன் " என எண்ணி தன் தவறை உணர்ந்து மீண்டும் அவரிடம் சென்று ஹுக்காவை வாங்கி இரண்டு இழுப்பு இழுத்துவிட்டார். அமெரிக்காவில் ஆற்றிய உரையில் உலகோரைத் தம் உறவாய் ஏற்க தயங்காத சுவாமிகளின் மனம் சொந்த நாட்டு மண்ணில் உள்ள ஒரு தூய்மைப் பணியாளரின் வார்த்தையைக் கேட்டதும் சில நிமிடம் அவர் காட்டிய தயக்கம் ஏன் ? ஆழப்பதிந்து விட்ட ஒன்று துறவிலும் துரத்துகையில் சுயநல மனிதர்கள் நாமெல்லாம் கோசமிடுவோம் 
ஒழிப்போம் ! ஒழிப்போம் ! சாதி மத பேதம் ஒழிப்போம் !

Comments

Popular posts from this blog

" ஸ்விட்ச் ஆஃப் "

முழுமையற்ற இயற்கையின் முன் ...