கூட்டு விளைவு (சிறு துளி பெருவெள்ளம்)
கூட்டு விளைவு: புத்தகம் சொல்லும் செய்தி
ஒரு மனிதன் என்பவன் யார்? எல்லா மனித உயிர்களிடமும் ஒரு தனித்துவம் எதனை அடிப்படையாகக் கொண்டு அறியப்படுகிறது ? ஒவ்வொரு மனிதனும் அவரவர்க்குரிய கண்ணோட்டம், விருப்பு வெறுப்புகள், பழக்க வழக்கம், அணுகும் விதம், குணம் போன்றவையால் தனித்து அடையாளம் காணப்படுகின்றனர். பொதுச் சமூகம் ஒருவரின் வெற்றி, தோல்வி, அறிவு, திறமை, பணம், புறத்தோற்றம், மனஉறுதி இவற்றையெல்லாம் கொண்டு ஒரு மனிதனை எடைபோடுகிறது.
இவற்றுக்கெல்லாம் அடிப்படையாக இருப்பது என்ன? ஒரு விஷயத்தை ஒரு விதக் கண்ணோட்டத்தில் அணுகுவதற்கு நாம் பிறப்பு முதல் கற்றுக் கொண்டுள்ளோம் என்பது தான். கண்ணோட்டம் சிந்தனையை முடக்கி மனப்போக்கை ஒரு கட்டுக்குள் வைத்து நடத்தையை நிர்ணயித்து அதாவது செயல்களில் அதைப் பிரதிபலிக்கிறது.
இதெற்கெல்லாம் அடிப்படை ஒருவரின் சிந்தனையும், கண்ணோட்டமும் தான் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் ஒரு தனி மனிதனால் தன்னுடைய சிந்தனையையும் கண்ணோட்டத்தையும் நிர்வகிக்க முடியும் என்பதை பல ஆன்மீகச் சிந்தானையாளர்கள் சொல்லக் கேட்டிக்ருப்போம். மேலும், இது உளவியல் ரீதியாகவும் சாத்தியம் என்பது அறிஞர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது.
சுயஒழுக்கம்:
சுயஒழுக்கம் மட்டுமே மனிதனுக்கு அதைச் சாத்தியப்படுதுவதற்கான வழியென்பதும் அதற்காகப் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன என்பதையும் பல வெற்றியாளர்கள், எழுத்தாளர்கள், ஆன்மீகத் துறவிகள் பொது வெளியில் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துள்ளனர். அவை குறித்த சுயமுன்னேற்றம் சார்ந்த புத்தகங்களைத் தேடுகையில் எனக்கு கிடைத்த ஒரு வித்தியாசமான தலைப்புடைய புத்தகம், தலைப்பே முதலில் கவனத்தை ஈர்த்தது, அமெரிக்க எழுத்தாளர் டேரன் ஹார்டி எழுதிய "கூட்டு விளைவு".
("The Compound effect " என்கிற ஆங்கில மொழிப் புத்தகத்தின் தமிழாக்கம்).
சுயமுன்னேற்றம் சார்ந்த புத்தகங்களை எழுதி வரும் இவர் பல வெற்றியாளர்களை நேர்காணல் கண்டு அவர்களின் சொந்த அனுபவங்களை ஆராய்ந்து இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். ஒரு மனிதன் தன்னை உயர்வாகச் சுயமதிப்பீடு செய்துகொள்வது மட்டுமே அவனுக்குரிய அசாத்திய தன்னம்பிக்கையையும், செயலாற்றும் தன்மையையும் வளர்த்துக் கொள்ள பேருதவி செய்கிறது. இந்தப் புத்தகம் அதற்கான அனைத்து அம்சங்களையும் கொண்டிருப்பதால் ஒரு வித புத்துணர்வை, முன்னேறுவதற்கான உந்துதலை வாசகர்களுக்குத் தரும் என்பது திண்ணம்.
அதென்ன கூட்டு விளைவு?:
இன்று நாம் புறஉலகில் காண்கிற அறிவியல் கண்டுபிடிப்புகள், கட்டிடங்கள், மாளிகைகள் என அனைத்தும் யாரோ ஒரு மனிதன் முன்னர் அகக்கண்ணில் பார்த்தவையே, முதலில் தன் மூளைக்குள் தொடர் சிந்தனைக்கு உட்படுத்திய ஒன்றுக்கு செயலாக்கம் புகுத்தி வெளியுலகில் உருப்பெற்று நிற்பவை தான் நாம் காண்பவையெல்லாம்.
நாம் இலக்கு ஒன்றை நிர்ணயித்து அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பதும், அதை ஒரு தாளில் எழுதிவைப்பது போன்ற எளிய முறைகள் அசாத்திய வெற்றிகளுக்கான தொடக்கம் என்பதைப் பலர் சொல்லக் கேட்டிருப்போம். ஆக, மூளைக்குத் தரப்படுகிற உள்ளீடுகள் சிந்தனைகளால் உந்தப்பட்டு செயல்வடிவம் பெறும் என்பது நிரூபணமாகிறது. உள்ளீடுகளின் தரம், சிந்தனையின் ஆழம், செயலில் முனைப்பு என எல்லாம் சேர்ந்தது தான் ஒரு மனிதனை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. கூட்டு விளைவின் அடிப்படை இதுதான், சிறு முயற்சியெனினும் தொடர்ச்சியாக ஒன்றில் ஈடுபடுதல் நம்ப முடியாத விளைவுகளை நம்மில் ஏற்படுத்தும்.மூளைக்குத் தரப்படுகிற நேர்மறையான உள்ளீடுகள் தொடர்ந்து ஒரு வித இயக்கத்தை மூளைக்குள் நிகழ்த்திக் கொண்டிருக்கும், எதிர்மறை உள்ளீடுகளும் இதில் அடங்கும்.
அன்றாடம் ஒரு முப்பது நிமிடம் புத்தகம் வாசிப்பதை, உடற்பயிற்சி செய்வதை, எழுத்துப் பணியில் ஈடுபடுவதை, விளையாட்டுப் பயிற்சி அல்லது ஒரு இசைக் கருவியை இசைக்கப் பழகிக் கொண்டிருப்பவரை எடுத்துக் கொள்வோம், தினமும் முப்பது நிமிடம் தொடர்ச்சியாக ஒரே காலவேளையில் மூளைக்குத் தரப்படுகிற தொடர் பயிற்சியானது நாளடைவில் ஒரு பழக்கமாக மாறிவிடுவதோடு, பேச்சிலும், சிந்தனையிலும், நடத்தையிலும் மாற்றத்தை ஏற்படுத்துவதோடு தினசரி வாழ்வின் அங்கமாக மாறி அந்தத் துறையிலோ அல்லது பணியிலோ சிறந்து விளங்கும் மனிதனாக ஒருவரை மாற்றும்.
உடற்பயிற்சி உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு உதவுவதோடு மன உறுதியையும் மேம்படுத்த உதவும், புத்தகம் பல புதிய கோணங்களைக் காட்டும், எழுத்து சிந்தனையில் தெளிவையும் நிதானத்தையும் கொடுக்கும், தொடர் விளையாட்டுப் பயிற்சி ஒருவனை சிறந்த விளையாட்டு வீரனாகத் திகழச் செய்யும். இத்தகைய தொடர் பயிற்சி இலக்கை நிர்ணயம் செய்தல், சாத்தியக் கூறுகளைக் கண்டறிதல், செயல்முறையில் தீர்க்கம் என உத்வேகத்தை அளிக்கும்.
"நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகறாய்"
எத்துணை அர்த்தம் பொதிந்த வரிகள். கூட்டு விளைவின் சாராம்சம் இந்த ஒற்றை வரியில் அப்பட்டமாகத் தெரியலாகிறது.
எதைப் பற்றிக் சிந்திக்கிறோமோ அதுவே வார்த்தையில் வெளிப்படும்; வார்த்தைகள் செயல்வடிவம் பெறும்; செயலும் மனச்சிந்தனையும் ஒருங்கே பொருந்தி இருப்பது தான் சுயஒழுக்கத்தின் வெற்றி.
வழிமுறைகளின் சுருக்கம்:
1.நிகழ்கணப் பொழுதில் கவனத்தைக் குவுத்தல்
2.மற்றவரைப் பற்றி குறையாகவோ எதிர்மறையாகவோ பேசாமல் இருத்தல்
3.நேர்மறையான சிந்தனை
4. தொடர் பயிற்சியில் ஈடுபடுதல், 5.செயலில் உறுதி
போன்றன நேர்மறைச் சிந்தனைகளை வளர்க்க கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளாகச் சொல்லப்படுகிறது.
"உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் நீ வலிமையுடையவன் ஆவாய்"
இந்தப் பொன்மொழி விவேகானந்தர் உலகிற்கு வழங்கிய அறிவுரைகளில் ஒன்று. நான் வலிமையுடையவன் என்று கருதத் தொடங்கி அதில் கவனத்தைத் துவக்கி அதற்கானச் சாத்தியப்பாடுகளை அதுவே நிரமாணிப்பதோடு பிரபஞ்ச விதியும் அதற்கு ஏற்றார் போல இணைந்து செயல் புரியத்துவங்கும்.
அளவுக்கு மிஞ்சிய பொறுப்புகள் அளவற்ற வலிமையைக் கொண்டு வந்து குவிக்கும் என்பதால் ஏதாவது ஒரு முனைப்போடு சமூக உறவுகளைப் பேணும் வகையிலும், குடும்ப உறவுகளைப் பேணுவதில் முதன்மையானவராக இருப்பதும், செல்வங்களை ஈட்டுதல், உடல் நலனைப் பேணுதல், அறிவை வளர்த்துக் கொள்ள தணியாத வேட்கை, கொஞ்ச நேரம் பொழுது போக்கில் லயித்து இருத்தல் என்று எப்போதும் ஒரு விதஎன்று எப்போதும் ஒரு வித பொறுப்புணர்வோடும் ஈடுபாட்டோடும் இருப்பது வலிமையைப் பெருக்கிக் கொள்வதற்கான வழிகள்.
எதில் இருந்து தொடங்குவது? :
சமூகம் சார்ந்து ஒன்றை அல்லது ஒரு தனி மனிதரை அணுகுகிற கண்ணோட்டத்தில் மாறுபாட்டைச் செய்வது தான் முதல் வழி.
புத்தரின் போதனைகளில் இவை குறித்தான கருத்துக்கள் காணப் படுகின்றன.
மனம் கண்ணாடியைப் போல பிரதிபலிக்க வேண்டும், நாம் அணுகுகிற கண்ணோட்டம் அந்தக் கண்ணாடியில் படிகிற தூசிகள்.
ஒரு குழந்தை மரத்தைப் பார்த்து மரம் என்று அறிந்து தனது கண்ணோட்டத்தைப் புகுத்திப் பார்ப்பாதில்லை வெறுமனே பிரதிபலிக்கிறது. பொறுப்புணர்வோடும் ஈடுபாட்டோடும் இருப்பது வலிமையைப் பெருக்கிக் கொள்வதற்கான வழிகள்.
எதில் இருந்து தொடங்குவது? :
சமூகம் சார்ந்து ஒன்றை அல்லது ஒரு தனி மனிதரை அணுகுகிற கண்ணோட்டத்தில் மாறுபாட்டைச் செய்வது தான் முதல் வழி. புத்தரின் போதனைகளில் இவை குறித்தான கருத்துக்கள் காணப்படுகின்றன.
மனம் கண்ணாடியைப் போல பிரதிபலிக்க வேண்டும், நாம் அணுகுகிற கண்ணோட்டம் அந்தக் கண்ணாடியில் படிகிற தூசிகள்.ஒரு குழந்தை மரத்தைப் பார்த்து மரம் என்று அறிந்து தனது கண்ணோட்டத்தைப் புகுத்திப் பார்ப்பாதில்லை,வெறுமனே பிரதிபலிக்கிறது.
எனவே, மனிதர்களை அணுகும் போது பொதுப் புத்தியிலோ அல்லது கண்ணோட்டத்திலோ அணுகுவதை விட்டு திறந்த மனப்பான்மையுடன் இருப்பது நம் வெற்றிகுத் துணையாகும் மனிதர்களை பிரபஞ்சம் நமக்கு அறிமுகம் செய்துவைக்கும் என்பது ஊர்ஜிதமாகிறது.
"நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்"
இந்தப் புத்தகம் ஏதேர்ச்சையாகக் கையில் வந்தது என்று நான் கருதவில்லை.எதைப் பற்றிச் சிந்திக்கிறோமோ அதையே ஈர்க்கிறோம் என்ற விதிப்படி நிகழ்ந்த ஒன்றாகத் தான் இதை நான் கருதுகிறேன். இந்த வாழ்க்கை விளக்கங்களுக்கு அப்பாற்பாட்ட பல அற்புதங்களைக் கொண்டிருக்கிறது. அதை உணர்ந்து கொள்வதற்குத் தன்னம்பிக்கையும், நல்ல மனிதர்களின் துணையும், பிரபஞ்சமும், இந்த மாதிரியான சுயமுன்னேற்றம் சார்ந்த புத்தகங்களும் நமக்குத் துணையிருக்கும் ஒரு அசாத்திய வெற்றியைச் சாத்தியமாக்கிட !.
Comments
Post a Comment